Posts

Showing posts from January, 2021

பிக்காசோவுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் - ஓஷோ

Image
 பிக்காசோவுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் - ஓஷோ    "  பிக்காசோவின் ஓவியங்கள் பிக்காசோவின் மனதுக்கு சாட்சியாகின்றன. எங்கோ அடி ஆழத்தில் பிக்காசோவுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். அவருடைய ஓவியங்கள் அப்பைத்தியத்திலிருந்து தப்பிக்கும் வழிகள். அந்த ஓவியங்கள் துயரம் மூலம் நிவாரணம் தருபவை. உன்னுடைய இயக்க தியானத்தில் எதை செய்கிறாயோ அதை அவர் ஓவியத்தின் மூலம் எறிகிறார். எறிந்தே ஆக வேண்டியிருக்கிறது. ஓவியங்கள் மூலமாக சுலபமாக எறிந்து விடவும் முடிகிறது. " கார்ல் கஸ்டாவ் யங் " தன்னிடம் வரும் நோயாளிகளை ஓவியம் வரைய சொல்வதுண்டு. மனோவியாதிகாரர்கள் பலரும் பிரமாதமான ஓவியங்களை வரைவார்கள். என்றாலும் அவை நிச்சயமாக பைத்தியகாரத்தனமானவைதான். பைத்தியம் பிடித்தவன் எப்படி புத்தியோடு வரைய முடியும்? அதில் அழகிருக்கலாம். வடிவிருக்கலாம். வண்ணக்கலவை சரியான விகிதத்தில் இருக்கலாம். தீர்க்க தரிசனம் கூட இருக்கலாம். என்றாலும் அதை சுற்றி அவனுடைய பைத்தியம் படர்ந்துதான் இருக்க வேண்டும்.  யங் மெதுவாக ஓர் உண்மையை தெரிந்து கொண்டார். ஓவியங்களை வரைய செய்து பைத்தியத்தை குணமாக்க முடியும் என்று தெரி...

சாவின் நிறம்

Image
  சாவின் நிறம்,         சாவா வாழ்வா எனும் என் மன இருள் குடைந்து கொண்டே இருக்கிறது. தஸ்தயெவ்ஸ்கியின் மறுபிறவி முத்ததின் அருமை என்னை பரவசம் அடைய செய்கிறது. இருந்தாலும் இரவின் இருள் என் மூச்சை அடக்க முயிற்சி செய்கிறது. எப்போதும் தனி அறையில் பெருத்த இரைச்சலோடும் பேய் போல் ஒடும் காற்றாடியின் சத்தம் தான் எனக்கு பெரும் அமைதி, தூக்கத்தை தரும் என்பதை இருளின் பேர் அமைதி அன்று உணர்த்தியது. இதுவரை நான் கண்டிராத இருள். அது ஒரு குகையின் இருள். உள்ளே நுழைந்து போக போக குகை குறுகி அங்கேயே சிக்க வைக்கும் குகை. அந்த இருட்டின் நிறம் கருப்பு அல்ல. அந்த நிறம் அனைவருக்கும் பரிட்சயமான நிறம் அல்ல. இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு மட்டுமே தென் படும் நிறமாக தான் இருக்க வேண்டும். அவ்வபோது அம்மாவின் அருகில் தூங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது நானே போய் தூங்க வேண்டும் என்றாலும் முடியாது. இருள் என்னை மிதிக்கும் வேளையில் அப்பா வாரி தூக்கி கொண்டால் அவரின் தோள்களில்  என் விழி பிதுங்கி பெருக்கெடுக்கும் கண்ணீர். அந்த நிறம் நெருங்குகிறது. சட்டென்று நான் வெகுநாட்களாக தேடி கொண்டிருந்...

தி. ஜானகிராமன் - பெண்களின் கால்கள்

Image
  தி. ஜானகிராமன் - பெண்களின் கால்கள்       எழுத்தாளர் தி. ஜா வின் ' தோடு ' என்ற குறுநாவலில், அதிகாலை பொழுதில் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போடுகிற வேளையில் திண்ணையில் தூங்கிய ஆண்பிள்ளைகள் விழித்து கோலம் போடுகிற பெண்மார்களை பார்க்கின்ற காட்சியை இவ்வாறு விளக்குகிறார்.          " வயசுக்கேற்றார் போல பக்குவத்திற்கு ஏற்றாற்போல, துணிச்சலுக்கு ஏற்றாற்போல   எதை எதையோ பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் புறாக்களையா, சேவல்களையா, கால்களையா - எதை என்று நிச்சயமாக சொல்ல முடியாத ஒரு பார்வை அது. தெரியும் கால்கள் எத்தனையோ வகை - கொலுசுக் கால்கள், உருட்டுக் கால்கள், எழும்பிச்சம்பழக் கால்கள், சந்தனக் கட்டைக் கால்கள், மாநிறக் கால்கள், கருப்புக் கால்கள், குச்சிக் கால்கள், சப்பைக் கால்கள், பித்தவெடிக் கால்கள், வெண்ணெய்க் கால்கள், சொறிந்துவிட்ட வெள்ளைக் கோடு மறையாத கால்கள், எலும்பிலிருந்து பற்றுவிட்ட சதை தளர்ந்த கால்கள், கிழக்கால்கள், மசக்கை மெருகு பூத்த கால்கள் ".          தி. ஜாவின் வர்ணனைகளில் இது ஒரு பகுதியே!..     ...

ஓஷோ - தம்மபதம் சில வரிகள்

Image
ஓஷோவின் " தம்மபதம் "  மனதருகில் நிற்கும் வரிகள்.         * சொற்களை பயன்படுத்துவது ஆபத்தான விளையாட்டும் கூட. காரணம் அர்த்தம் என்னுடனேயே தங்கிவிட சொல் மட்டுமே உங்களை அடைகிறது.        * இதை நினைவில் நிறுத்து. புலனின்பங்களை சார்ந்திருக்கும் வரை நீ பலவீனன்தான்.         * அதிகாலையில் எழுந்து போய் உதிக்கும் சூரியனை பார். நடு இரவில் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களை பார். மரங்களையும் பாரைகளையும் நண்பராக்கி கொள். ஆற்றருகே உட்கார்ந்து அதன் கலகலப்பை கேள். அப்படி செய்யும்போது கடவுளின் உண்மையான கோயிலுக்கு வெகு அருகில் போய் சேர்வாய். இயற்கையே அவருடைய உண்மையான கோவில். இயற்கை உன்னை தன் வசப்படுத்தி விடு. இயற்கையை உன் உரிமையாக்க நினைக்காதே. ஆள வேண்டும் என்ற ஆசை லோகாயுதமானது. வசப்பட வேண்டும் என்ற ஆசை தெய்வீகமானது.             * உலகில் ஆன்மிகம் இல்லாமல் போய் விட்டதற்கு காரணமே மதங்கள் திணிக்கபடுவது தான். பெற்றோர்கள், மதஸ்தாபனங்கள், அரசாங்கம், நாடு என்று எல்லாமும் குழந்தை மீது ஏதோ ஒரு மதத்தை திணிக்க அப்படி அவசரபடு...