ஓஷோ - தம்மபதம் சில வரிகள்

ஓஷோவின் " தம்மபதம் "  மனதருகில் நிற்கும் வரிகள்.





        * சொற்களை பயன்படுத்துவது ஆபத்தான விளையாட்டும் கூட. காரணம் அர்த்தம் என்னுடனேயே தங்கிவிட சொல் மட்டுமே உங்களை அடைகிறது.


       * இதை நினைவில் நிறுத்து. புலனின்பங்களை சார்ந்திருக்கும் வரை நீ பலவீனன்தான்.


        * அதிகாலையில் எழுந்து போய் உதிக்கும் சூரியனை பார். நடு இரவில் உட்கார்ந்து வானத்து நட்சத்திரங்களை பார். மரங்களையும் பாரைகளையும் நண்பராக்கி கொள். ஆற்றருகே உட்கார்ந்து அதன் கலகலப்பை கேள். அப்படி செய்யும்போது கடவுளின் உண்மையான கோயிலுக்கு வெகு அருகில் போய் சேர்வாய். இயற்கையே அவருடைய உண்மையான கோவில். இயற்கை உன்னை தன் வசப்படுத்தி விடு. இயற்கையை உன் உரிமையாக்க நினைக்காதே. ஆள வேண்டும் என்ற ஆசை லோகாயுதமானது. வசப்பட வேண்டும் என்ற ஆசை தெய்வீகமானது.


            * உலகில் ஆன்மிகம் இல்லாமல் போய் விட்டதற்கு காரணமே மதங்கள் திணிக்கபடுவது தான். பெற்றோர்கள், மதஸ்தாபனங்கள், அரசாங்கம், நாடு என்று எல்லாமும் குழந்தை மீது ஏதோ ஒரு மதத்தை திணிக்க அப்படி அவசரபடுகிரார்கள். 


            * பூசாரி குடும்பத்தில் ஒருவராக இருந்து கொண்டு பூசாரிகள் தான் உலகத்திலேயே மிக பெரிய நாத்திகர்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. 


              * அரைகுறையான முயற்சிகள் வீண்.  வெதுவெதுப்பான நீர் ஆவி ஆகாது. அரையும் குறையுமான முயற்சிகள் தோற்றுதான் போகும்.


               * ஒரு மரம் வளர்வதை போல இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கிறது. உயர வளரும் கிளைகளை பார்க்கும் நீ, ஆழ போகும் வேர்களை பார்ப்பதில்லை.


                * கோடிக்கணக்கான விரல்கள் சுட்டிக்காட்டினாலும் நிலவு ஒன்றுதான்.

Comments

Popular posts from this blog

சாவின் நிறம்

PULAVAR KULANDHAI