Posts

Showing posts from February, 2021

கருணையின் கையசைப்பு - சிறுகதை

Image
  கருணையின் கையசைப்பு        தொடரும் நான்கு நாள் மழையினால் அந்த சுற்றுச்சூழல் முழுவதும் குளிரேறி இருந்தது. அங்கும் இங்குமாக மழையினால் முகம் சுளிக்கும் மக்கள் ஆனால் மழையை வெறுப்பவர்கள் அல்ல. காவலர்களும் நடைமேடைகளில் ரைன்கோட் அணிந்து மறைவான இடங்களில் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு மூன்று பேர் சிகரெட் புகைத்து கொண்டிருந்தார்கள். சிறு குறு வெற்றிலை எலும்பிச்சை வாழ இலை வியாபாரிகள் தங்களின் மூட்டைகளின் முடிச்சை கழற்றி சேரும் செகதியுமான தரையை வெள்ளை சாக்குகளால் போர்த்தி வழக்கமான வியாபாரத்திற்கு ஆயத்தமானார்கள். வாகனங்களின் இரைச்சலும் தொடங்கின. சமிக்கை விளக்கின் சிவப்பு வண்ணத்தை எரிவதை பார்த்ததும் கை சட்டையை மடக்கி புகைத்துகொண்டே சாலையை தேய்த்தவாறே கடந்தான் அவன். பிறகு நேரு சிலையை கடந்தான். நெருஞ்சி முட்கள் மேல் நடப்பது போல் நிதானமாக அடி எடுத்துவைத்தான். நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்தவர்களில் ஒரு சிலர் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். காவலர்களும் கூட. பழைய பேருந்து நிலையம் முன் நின்று சிகரெட்டை அறுந்து போன இடதுகால் செருப்பால்  அனைத்தான். சுற்றிலும் அந்த க