Posts

Showing posts from March, 2020

ஜெயமோகனின் ' யானை டாக்டர் '

Image
' யானை டாக்டர் ' எனது கல்லூரி நாட்களில் நான் படிக்க தவறிய குறுநாவல் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ' யானை டாக்டர் ' இக்குறுநாவலில் பீர் குப்பிகள் சிதரிடிக்கபட்டிருபது போல், எனது கைகளாலும் பீர் குப்பிகளை பாறை மீதும், மரத்தின் மீதும், கூழாங்கற்கள் மீதும் சுக்குநூறாக சிதரடிகபட்டிருகிறது. சிதறிய குப்பிகளை மனதில் சில நேரம் ஓடவிட்டு அற்ப மகிழ்ச்சியை அனுபவிப்பது தான் மனிதனின் குரூரம். அந்த சிறு சில்லுகளால் விலங்குகளுக்கு நேரும் வலி துன்பத்தை பற்றியும், இது போல கண்ணாடி சில்லுகளாக மனித மான்புக்கு எதிராக இருப்பதை பற்றி தான் எழுத்தாளன் தனது எழுதுகோலை உயர்த்துகிறான்.

Anton Checkov in Island of Punishment

Image
மெழுகுவர்த்தியை உண்ணும் கைதிகள்!                 S. ராமகிருஷ்ணன் எழுதிய செகாவ் வாழ்கிறார் புத்தகத்தில் தண்டனை தீவு என்ற ஒரு தலைப்பில் சைபீரியா தண்டனை தீவை பற்றி செகாவ் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க அந்த தீவிற்கு தன் உயிரை பணயம் வைத்து பயணம் செய்திருக்கிறார். அந்த தீவில் உள்ள ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் நோய்யுற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அங்கு ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் குறைவாகவும் இருப்பதால் அங்கு பெண்கள் பெரும்பாலும் வேசையாகவே இருந்திருக்கிறார்கள். குழந்தை பெற்றுகொண்டால் அந்த குழந்தைக்கு  பாதி உணவு போய்விடும், அவளுக்கு உணவு மிஞ்சாது என்பதால் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. தவறி குழந்தை பிறந்தாலும் சீக்கிரமே இறந்துவிடும். சில நேரங்களில் அங்குள்ளவர்கள் பசியினால் மெழுகுவர்த்தியை தின்னும் நிலைமையும் இருந்திருக்கிறது. இது போன்ற பல ஆய்வுகளை மேற்கொண்ட செகாவ் அந்த தீவை பற்றி பல குறிப்புகளை எடுத்து தனது ஆய்வுக்கட்டுரை அனைத்தும் டாக்டர் பட்டத்திற்காக சமர்ப்பித்தார். ஆனால் அதனை மருத்துவ பல்கலைகழகம் ஏற்று கொள்ளவில்லை. அதனால் அதனை தனி நூலாக வெளியிட்டுள்ளார் செகாவ்.

Robbed Nobel Prize of Tagore

Image
திருடப்பட்ட நோபல் பரிசு,   (Non European Asian) ஆசியாவிலேயே முதன் முதலில் நோபல் பரிசு பெற்ற தாகூரின் நோபல் பதக்கமானது, 2004இல் திருடப்பட்டு விட்டது என்பது எனக்கு இன்று தான் தெரியும். அதுவும் ' முனைவர் ப. சரவணன் ' எழுதிய ' தாகூர் வியத்தகு ஆளுமை ' என்ற புத்தகம் மூலமே தெரிய வந்தது.            இதை பற்றி உங்களில் சிலருக்கு தெரிந்திருக்க கூடும். இருந்தாலும் இந்தியாவில் எழுத்தாளர்களின் நிலமை என்பது இது தான் என இந்திய சமூகம் சொல்ல வருவது போல தோன்றுகிறது. நோபல் பரிசு பெற்றவருக்கே இந்த நிலமை என்றால், நமது எழுத்தாளர்களுக்கு எந்த மாதிரியான எதிரொளிப்பை இந்த சமூகம் கொடுத்திருக்கும் என்பதையும், புதிய எழுத்தாளர்கள் எந்த மாதிரியான மனநிலையோடு எழுதுவார்கள் என்பது சிந்திக்க முடியாதவை.. Follow me on my facebook page ' Books Corner-tamil '

Rabindranath Tagore

Image
' 30.5.1926 நாள் தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பில்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் ' பெனிட்டோ முசோலினி ' ஐ சந்தித்தார். 20.7.1926 ஆம் நாள் தாகூர் முசோலினியை கண்டிததுடன் அவர்களுடைய உறவு முறிந்து போனது ' .                      - முனைவர் ப. சரவணன் பாசிசத்தை நிலை நாட்ட ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர் உடன் கை கோர்த்தவரே பெனிட்டோ முசோலினி. To follow me,check out my facebook page named ' Books Corner-tamil '