தி. ஜானகிராமன் - பெண்களின் கால்கள்

 




தி. ஜானகிராமன் - பெண்களின் கால்கள்


      எழுத்தாளர் தி. ஜா வின் ' தோடு ' என்ற குறுநாவலில், அதிகாலை பொழுதில் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போடுகிற வேளையில் திண்ணையில் தூங்கிய ஆண்பிள்ளைகள் விழித்து கோலம் போடுகிற பெண்மார்களை பார்க்கின்ற காட்சியை இவ்வாறு விளக்குகிறார். 

        " வயசுக்கேற்றார் போல பக்குவத்திற்கு ஏற்றாற்போல, துணிச்சலுக்கு ஏற்றாற்போல   எதை எதையோ பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
ஆனால் புறாக்களையா, சேவல்களையா, கால்களையா - எதை என்று நிச்சயமாக சொல்ல முடியாத ஒரு பார்வை அது. தெரியும் கால்கள் எத்தனையோ வகை - கொலுசுக் கால்கள், உருட்டுக் கால்கள், எழும்பிச்சம்பழக் கால்கள், சந்தனக் கட்டைக் கால்கள், மாநிறக் கால்கள், கருப்புக் கால்கள், குச்சிக் கால்கள், சப்பைக் கால்கள், பித்தவெடிக் கால்கள், வெண்ணெய்க் கால்கள், சொறிந்துவிட்ட வெள்ளைக் கோடு மறையாத கால்கள், எலும்பிலிருந்து பற்றுவிட்ட சதை தளர்ந்த கால்கள், கிழக்கால்கள், மசக்கை மெருகு பூத்த கால்கள் ". 
 
      தி. ஜாவின் வர்ணனைகளில் இது ஒரு பகுதியே!..


                                         - தேசிகன்







Comments

Popular posts from this blog

Anton Checkov in Island of Punishment

ANBU THOZHIKU