சாவின் நிறம்

 




சாவின் நிறம்,

        சாவா வாழ்வா எனும் என் மன இருள் குடைந்து கொண்டே இருக்கிறது. தஸ்தயெவ்ஸ்கியின் மறுபிறவி முத்ததின் அருமை என்னை பரவசம் அடைய செய்கிறது. இருந்தாலும் இரவின் இருள் என் மூச்சை அடக்க முயிற்சி செய்கிறது. எப்போதும் தனி அறையில் பெருத்த இரைச்சலோடும் பேய் போல் ஒடும் காற்றாடியின் சத்தம் தான் எனக்கு பெரும் அமைதி, தூக்கத்தை தரும் என்பதை இருளின் பேர் அமைதி அன்று உணர்த்தியது. இதுவரை நான் கண்டிராத இருள். அது ஒரு குகையின் இருள். உள்ளே நுழைந்து போக போக குகை குறுகி அங்கேயே சிக்க வைக்கும் குகை. அந்த இருட்டின் நிறம் கருப்பு அல்ல. அந்த நிறம் அனைவருக்கும் பரிட்சயமான நிறம் அல்ல. இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு மட்டுமே தென் படும் நிறமாக தான் இருக்க வேண்டும். அவ்வபோது அம்மாவின் அருகில் தூங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இப்போது நானே போய் தூங்க வேண்டும் என்றாலும் முடியாது. இருள் என்னை மிதிக்கும் வேளையில் அப்பா வாரி தூக்கி கொண்டால் அவரின் தோள்களில்  என் விழி பிதுங்கி பெருக்கெடுக்கும் கண்ணீர். அந்த நிறம் நெருங்குகிறது. சட்டென்று நான் வெகுநாட்களாக தேடி கொண்டிருந்த நிறம் போல காட்சி தெரிகிறது. அது ஒரு மேகத்தின் நிறமாக தான் இருக்க வேண்டும். எனது ரேடியம் வர்ண தூறிகையை எடுத்து அந்த இருள் மேல் எச்சில் துப்பி குழைத்து மேகம் வரைந்தால் உயிர் வந்து மழையே பெய்து விடும். அந்த இருள் மீண்டும் குகை போன்றே மாறியது. கண் கூசும் அந்த இருளில், அந்த அறையில் 30 வருடங்களுக்கு முன்னால் எவரோ மேர் சுவரில் வெளிச்சம் வர செய்ய ஒரு ஜன்னல் போன்ற துவாரம் செய்துள்ளார். அந்த இருளில் அது ஒரு கண்ணாடியின் சிதறல் தான். அவன் சூரிய ஒளியின் வெளிச்சம் வரவே அந்த ஜன்னலை செய்திருப்பான். நிலவின் ஒளி படரும் என நினைத்திருக்க மாட்டான். இந்த இருளில், நிலவின் ஒளி என் உடம்பில் பரவி வழிந்தது, எதுவாக இருந்தாலும் சரி அவனுக்கு எனது முத்தம். 

Comments

Popular posts from this blog

ஓஷோ - தம்மபதம் சில வரிகள்

PULAVAR KULANDHAI