KADHALIN KAVIDHAI


காதலின் கவிதை :
     
                                        


 மாடியில் காத்திருப்பாள் - நான்
 அந்த வழியாக செல்கிறேன்       என்றதும் 
 பார்ப்பேன் அவளை         அரைகுறையாய் 
 பார்த்துவிடுவான் என்னை     கடைக்காரன் அதனால் 
   பதிவாகிவிடும் அவளின்     புன்முறுவழும் 

 புருவக்குறிகளும் என் நெஞ்சில் 

 தினமும் நீந்துவது போலிருக்கும் 

 காதல் நஞ்சில்

 மீண்டும் போவேன் அவளை காண -   காதல்  

 கரைசேர்ந்துவிட வேண்டுமல்லவா!! 







  காதலியே எனது இரண்டாவது     தாயை 
  பார்த்துவிட்டேன் உன்னிடத்தில் 
  மூன்றாவது தாயை கொடுத்துவிடு 
  எனது மகளாய்..



 என்னையும்   ஆன்மிகவாதியாக்கிவிட்டாள்   அவள் - என் 
 நெற்றியில் குங்குமம் வைக்கும்   போது.




  ஆகிவிடாதே !
  சமாதானம் ஆகி விடாதே!! - உன் 
  கோபமுகபாவனையை       ரசிக்க வேண்டும் 
  சீக்கிரம் சமாதானம் ஆகிவிடாதே!!!





  கவலைப்படாதே கிடைத்துவிட்டேன் 
  பெருமூச்சை விடு - இனி  
  உன்னோடு இருப்பேன் என்
  உயிர்மூச்சு உள்ளவரை.





  ஏன் என்னை இப்படி 
  பார்த்துக்கொள்கிறாய் - நான்  
  கையெழுத்திட்ட சான்றிதழை 
  பார்க்கவேண்டும் ஒருமுறை 
  திருமண சான்றிதழா? 
  அல்லது என்னை 
  தத்தெடுத்த பத்திரமா!!! என்று..


  

- நான் தேசிகன் 

Comments

Post a Comment

Popular posts from this blog

ஓஷோ - தம்மபதம் சில வரிகள்

PULAVAR KULANDHAI

கருணையின் கையசைப்பு - சிறுகதை