PULAVAR KULANDHAI PADAIPUGAL - 9
புலவர் குழந்தை படைப்புகள் - 9
இக்கட்டுரையில் (" " )இந்த குறியீட்டுக்குள் உள்ள எழுத்துக்கள் புலவர் குழந்தை அவர்களின் எழுத்துக்கள் ஆகும், அதனை அப்படியே தந்துள்ளேன் .
கட்டுரை - 12:
நமது வாழ்க்கையில் சில குறிப்பிட்ட மனிதர்களை மனதில் நினைத்தால் அவர்களின் உருவமும், அவர்களின் ஆடையும், முகபாவனையும் மனதில் சட்டென்று வந்து நிற்கும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் புலவர் குழந்தை அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
காவி உடையும், காவி உருமாலையும் போட்டுக்கொண்டிருக்கும் மனிதர்,"ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே இறைவன் திருப்பணி" என்ற கொள்கையை உலகெங்கும் பரப்பியவர், நரேந்திர நாதன் என்பது இவரது இயற்பெயர், பகவான் ராமகிருஷ்ணரின் முதல் மாணாக்கர்
ஆவார். அவர்தான் சாமி விவேகானந்தர்.
நமது வாழ்க்கையில் சில குறிப்பிட்ட மனிதர்களை மனதில் நினைத்தால் அவர்களின் உருவமும், அவர்களின் ஆடையும், முகபாவனையும் மனதில் சட்டென்று வந்து நிற்கும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் புலவர் குழந்தை அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
காவி உடையும், காவி உருமாலையும் போட்டுக்கொண்டிருக்கும் மனிதர்,"ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே இறைவன் திருப்பணி" என்ற கொள்கையை உலகெங்கும் பரப்பியவர், நரேந்திர நாதன் என்பது இவரது இயற்பெயர், பகவான் ராமகிருஷ்ணரின் முதல் மாணாக்கர்
ஆவார். அவர்தான் சாமி விவேகானந்தர்.
சாமி விவேகானந்தர்
விவேகானந்தர் அவர்கள் 11.9.1893 ல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ எனும் நகரில் உலகில் உள்ள புகழ் பெற்ற சமய தலைவர்கள் கலந்துகொண்ட உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார். விவேகானந்தர் அவர்கள், 'அமெரிக்கா நாட்டுப் பிறந்தவிகளே! பிறந்தவர்களே!' (சகோதரிகளே, சகோதரர்களே) எனத் தொடங்க மாநாட்டிலுள்ள அனைவரும் இடிபோன்ற முழக்கத்தில் கைதட்டலும், ஆரவாரம் செய்தார்கள்.
சிகாகோவில் சாமி விவேகானந்தர்
சாமிகள் இந்தியச் சுற்று பயணம் செய்தபோது, ஆழ்வார் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு மூன்று நாட்களுக்கு தொடர்சொற்பொழிவு ஆற்றினார். சொற்பொழிவை கேட்போர் அனைவரும் முடிந்தவுடன் சாமிகள் உணவு உன்னார்களா என்று சிந்திக்காமல் கிளம்பிவிட்டார்கள். சாமிகள் "காசை கையால் தொடுவதில்லை; உயிர் போவதாயிருந்தாலும் ஒருவரை உணவு கேட்பதில்லை; நாளைக்கென்று யாதொரு பொருளையும் மீத்துவைப்பதில்லை" போன்ற கடும் நோன்பை கடைபிடிப்பவர்.
அதனால் மூன்று நாட்களும் உணவு எதுவும் உண்ணாமல் தொடர்ந்து சொற்பொழிவாற்றிவிட்டு தான் தங்கியிருக்கும் இடத்தில் படுத்துக்கொண்டார். உண்ணாமையால் உடல் சோர்ந்து, பசி காதை அடைத்தது. இருப்பினும் அங்கு நெடுநேரம் யாரும் வரவில்லை. சாமிகள் கடும்பசியால் களைத்து படுத்துக்கிடந்தார்.
சிறிது நேரத்திற்க்குப் பிறகு அங்கு ஒரு பழங்குடிமகன் ஒருவன் வந்தான், அடிகள் சோர்ந்து படித்திருப்பதை பார்த்தான். அவர் பக்கத்தில் போய் சாமி!சாமி! என்றான். அடிகள் கண்வவிழித்து பார்த்துவிட்டு திரும்பவும் படுத்துக்கொண்டார். அடிகள் பசியால்தான் சோர்ந்து படுத்துகிறார் என்பதை புரிந்து கொண்டான். 'பெரியீர்', எத்தனை வேளை யாக சாப்பிடாமல் இருந்தீர்களோ! சுருண்டு படுத்திருக்கிறீர்கள். இந்நிலையிலும் கூட என்னால் தங்களின் பசியை போக்க முடியாதவனாக இருக்கிறேன் என்று சொல்லி மிகவும் வருந்தினான். மேலும், சாமிகள் நீங்கள் உயர் குலத்தினர் போல தெரிகிறதே, நானோ தீண்டப்படாத சாதி என்னால் எப்படி தங்களுக்கு உணவு கொண்டுவந்து கொடுக்கமுடியம்? இந்த நிலையிலும் உதவ முடியாத பாவி! என்று மனம் வருந்தினான்.
சாமிகள் மெதுவாக கண்களை திறந்து, மங்கிய குரலில், 'தோழா! வருந்தாதே, உன்னுடைய உணவே எனக்கு பாற்சோறு போன்றதாகும். உன் வீட்டில் உள்ள உணவில் கொஞ்சம் கொண்டு வாரும்; வருந்துவதைவிடும்' என்றார். பெரியீர்! நானோ தாழ்த்தப்பட்டவன். நான் தொட்ட உணவை தங்களுக்கு உண்ண உணவு கொடுப்பது பாவமல்லவா? என்றான். சாமிகள், "நண்பா! மக்களில் உயர்வு தாழ்வு கருதுவது மடமையாகும். என்றோ, எவராலோ தாழ்த்தப்பட்டீர்கள். பாவம்! அக்கொடுமை இன்னும் தொலையாத மக்களினத்தை ஆட்டிப்படைக்கிறது; வாடி வருத்துகிறது. 'இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்' என்பது, ஆன்றோர் வாக்கன்றோ? நீ அன்புடன் அளிக்கும் உப்பில்லாப் பழங்கூழும் எனக்கு ஆரமுதமாகும். தயங்காமல் போய்க்கொண்டு வாரும்" என்றார்.
உணவு கொடுத்தால் ஊரார் வெகுளுவார் என அஞ்சினாலும், சாமிகளின் பசி தணிய விரைந்து தன் குடிசைக்குள் சென்று, பழைய சோறு கொண்டுவந்து கொடுத்தான். அதை அன்புடன் வாங்கிய சாமிகள் அவ்வுணவை உண்டு பசி தணிந்தார். "நண்பா! இன்று நீ இல்லாவிட்டால் நான் இவ்வுலகை விட்டுச் சென்றிருப்பேன். நான் உயிரோடு இவ்வுலகத்தில் இருக்க உதவியவன் நீயே" என, அப்பழங்குடி மகனை மார்புறத் தழுவினார். அதற்க்கு அவன், இதை யாரிடமும் சொல்லாதீர்கள்! நான் தங்களுக்கு உணவு கொடுத்தது தெரிந்தால் உயிரோடு வாழமுடியாது, என்று வேண்டிக்கொண்டான்.
மறுநாள் சாமிகள் ஆழ்வார் மன்னரின் அரண்மனைக்குச் சென்றிருந்தார். நெடுநேரேம் மன்னரிடம் பேசிக்கொண்டிருந்தார் முடிவில், தனக்கு உணவளித்த பெருங்குணமுடைய பழங்குடிமகனை பற்றி அரசனிடம் கூறினார். அரசன் அப்பழங்குடிமகனை வரவழைத்து அவனைப் போற்றும் வகையில் வேண்டிய பொருள் கொடுத்தனுப்பினான். இச்செய்தி அந்நகர் முழுவதும் பரவி, சாமிகளின் பசியைப் பற்றிக் கவனியாததவறை எண்ணி வருந்தினார்கள். மேலும் அவ்வூர்மக்கள் சாமிகளின் உயர்ந்த குணத்தை போற்றி பாராட்டினார்கள்.
- நான் தேசிகன்
Comments
Post a Comment