பிக்காசோவுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் - ஓஷோ
பிக்காசோவுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும் - ஓஷோ
அந்த ஓவியங்கள் துயரம் மூலம் நிவாரணம் தருபவை. உன்னுடைய இயக்க தியானத்தில் எதை செய்கிறாயோ அதை அவர் ஓவியத்தின் மூலம் எறிகிறார். எறிந்தே ஆக வேண்டியிருக்கிறது. ஓவியங்கள் மூலமாக சுலபமாக எறிந்து விடவும் முடிகிறது.
" கார்ல் கஸ்டாவ் யங் " தன்னிடம் வரும் நோயாளிகளை ஓவியம் வரைய சொல்வதுண்டு. மனோவியாதிகாரர்கள் பலரும் பிரமாதமான ஓவியங்களை வரைவார்கள். என்றாலும் அவை நிச்சயமாக பைத்தியகாரத்தனமானவைதான். பைத்தியம் பிடித்தவன் எப்படி புத்தியோடு வரைய முடியும்? அதில் அழகிருக்கலாம். வடிவிருக்கலாம். வண்ணக்கலவை சரியான விகிதத்தில் இருக்கலாம். தீர்க்க தரிசனம் கூட இருக்கலாம். என்றாலும் அதை சுற்றி அவனுடைய பைத்தியம் படர்ந்துதான் இருக்க வேண்டும்.
யங் மெதுவாக ஓர் உண்மையை தெரிந்து கொண்டார். ஓவியங்களை வரைய செய்து பைத்தியத்தை குணமாக்க முடியும் என்று தெரிந்து கொண்டார். "
- ஓஷோ ' தம்மபதம் ' நூலில்.
Comments
Post a Comment