Anton Checkov in Island of Punishment

மெழுகுவர்த்தியை உண்ணும் கைதிகள்!
     
          S. ராமகிருஷ்ணன் எழுதிய செகாவ் வாழ்கிறார் புத்தகத்தில் தண்டனை தீவு என்ற ஒரு தலைப்பில் சைபீரியா தண்டனை தீவை பற்றி செகாவ் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க அந்த தீவிற்கு தன் உயிரை பணயம் வைத்து பயணம் செய்திருக்கிறார். அந்த தீவில் உள்ள ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் நோய்யுற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அங்கு ஆண்கள் அதிகமாகவும் பெண்கள் குறைவாகவும் இருப்பதால் அங்கு பெண்கள் பெரும்பாலும் வேசையாகவே இருந்திருக்கிறார்கள். குழந்தை பெற்றுகொண்டால் அந்த குழந்தைக்கு
 பாதி உணவு போய்விடும், அவளுக்கு உணவு மிஞ்சாது என்பதால் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. தவறி குழந்தை பிறந்தாலும் சீக்கிரமே இறந்துவிடும். சில நேரங்களில் அங்குள்ளவர்கள் பசியினால் மெழுகுவர்த்தியை தின்னும் நிலைமையும் இருந்திருக்கிறது. இது போன்ற பல ஆய்வுகளை மேற்கொண்ட செகாவ் அந்த தீவை பற்றி பல குறிப்புகளை எடுத்து தனது ஆய்வுக்கட்டுரை அனைத்தும் டாக்டர் பட்டத்திற்காக சமர்ப்பித்தார். ஆனால் அதனை மருத்துவ பல்கலைகழகம் ஏற்று கொள்ளவில்லை. அதனால் அதனை தனி நூலாக வெளியிட்டுள்ளார் செகாவ்.

Comments

Popular posts from this blog

ஓஷோ - தம்மபதம் சில வரிகள்

PULAVAR KULANDHAI

கருணையின் கையசைப்பு - சிறுகதை