ANBU THOZHIKU
என் முதல் தோழியே உன் முதலும் இறுதியுமான தோழன் பேசுகிறேன் எல்லாவற்றையும் கொண்டுபோனாய் - ஏன் உன் நினைவுகளை மட்டும் விதைத்துவிட்டுப்போனாய் பூத்துக்குலுங்குகிறது ஆழமாய் வடுவாய் என்னிடம் என் அம்மை,அப்பன் கையில் மெழுகாய் தவழ்ந்தாய் எரிந்தது நீ! உருகியது நான்! எங்கே! உனது சிரிப்பும் அழுகையும் எங்கே! உனது கேலியும் கிண்டலும் எங்கே! உனது புரணியும் புன்முறுவலும் விசயம் சொன்னார்கள் விரைந்து வந்தோம் ஒப்பாரி சத்தம் ஆலமரத்தடியில் - கண்ணில் நீர்த்ததும்பி வடிந்தது கையில் வெள்ளை வண்டியில் வெள்ளை துணி போட்டு உன்னை இறக்க ஓ!! என்ற சத்தம் - எனது கண் கண்டதில்லை என்னிடம் இவ்வளவு கண்ணீர் வருமென்று சேலை சிநேகிதியே !! இது சுடுகாடு அல்ல - உன்னை தெய்வமாய் வைப்பதற்கான ஏற்பாடு நெருப்பிற்கு விளையாட்டு காட்டியவளே! - மீண்டும் பிறப்பாய் வருவாய் மகளாய் என்னிடம் நீ!! - நான் தேசிகன்