PULAVAR KULANDHAI
புலவர் குழந்தையின் படைப்புகள் - 9
வணக்கம், சில நாட்களுக்கு முன்பு நூலகத்திற்கு சென்றிருந்தேன். அடுக்கிலிருந்த நூல்களை தடவிக்கொண்டே போகும்போது, புலவர் குழந்தை படைப்புகள் - 9 என்ற நூல் தென்பட்டது. அந்த நூல் புலவர் குழந்தை அவர்களின் கட்டுரைகளை தொகுத்த நூலாகும். புலவர் அவர்கள் செய்யுள், உரைநடை, இலக்கணம், உரைநூல்கள் ஆக மொத்தம் 29 நூல்கள் படைத்துள்ளார். புலவர் அவர்கள் தனி ஒருவராக திருக்குறளுக்கு உரை எழுதி திருக்குறள் குழந்தையுரை என்று வெளியிட்டார். அவுரையை 28 நாட்களில் எழுதி முடித்தார் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.
இவர் எழுதிய நூல்களில் குறிப்பிட்ட ஒரு நூல் அரசால் தடைசெய்யப்பட்டது. அந்த காவிய நூல் ஆதிக்க சாதியினரை கதிகலங்கச் செய்தது. பல விவாதங்களும், சொற்பொழிவுகளும், மாநாடுகளும் இந்த நூலை அடிப்படையாகக்கொண்டு நடைபெற்றது. அந்த நூல்தான் இராவண காவியம் என்பதாகும்.
பின்பு 1971ல் அன்று முதலமைச்சராக இருந்த மு. கருணாநிதி அவர்களால் தடை நீக்கம் செய்யப்பட்டது. மேலும் புலவர் குழந்தை அவர்களின் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
புலவர் குழந்தையின் படைப்புகள் - 9
கோ. இளவழகன் அவர்களால் பதிப்பிக்கப்பட்ட இந்நூல் 9வது தொகுதியாகும். மொத்தம் 17 தொகுதிகள், 17 தொகுதிகளில் புலவர் குழந்தை அவர்களின் நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் மொத்தம் 388 பக்கங்களும், 4 தலைப்புகளும் உள்ளன. 4 தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் மொத்தம் 46 கட்டுரைகள் ஆகும்.
அதில் ஒன்றே குலம் என்ற தலைப்பில் 12 கட்டுரைகள் உள்ளன. 12 கட்டுரைகளில் நாம் அறிந்த பெரியோர்களிடம் நாம் அறிந்திடாத வரலாற்று தகவல்கள் இருக்கின்றன. புலவர் குழந்தை அவர்கள் குறிப்பிட்ட ஒவ்வொருவரையும் பற்றி பின் வரும் நாட்களில் பதிவிடுகிறேன்.
- நான் தேசிகன்
😄
ReplyDeletebangkok ayam video ayam sabung
ReplyDelete